அவ்வகையினில் செத்துப்போன நிலையிலிருக்கும் கிராமங்களிடையேயான சாதிய சண்டைகளை தூண்டிவிடுவதினில் படைத்தரப்பினூடாக நடவடிக்கைகளை அரசு ஆரம்பித்துள்ளது.அவ்வகையினில் தூண்டப்படும் குறிப்பிடத்தக்க தமது ஆதரவாளர்களுடாக வன்முறைகளை முன்னெடுத்து அனைத்து தரப்புக்களையும் அச்சமூட்டவும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக நம்பப்படுகின்றது.
இவ்வகையினில் நேற்று முன்தினமான புதன் கிழமை திருமணமண்டபமொன்று தாக்கப்பட்டதுடன் அதன் முகாமையாளரும் தாக்கப்பட்டுள்ளார்.ஆவரங்கால் ஒன்றியம் எனும் இலண்டனை மையமாக கொண்ட அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட நூலொன்றின் பிரதிகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.20ம் நூற்றாண்டினில் ஆவரங்கால் சிவபூமி எனும் பேரினில் வெளியிடப்பட்ட அந்நூலினில் யுத்தகால படுகொலைகள மற்றும் படைத்தரப்பினை விமர்சிக்கும் பக்கங்களும் இருந்ததாக கூறப்படுகின்றது.
இராணுவப்புலனாய்வு பிரிவினர் குவிந்து நிற்க ஒரு தொகுதி இளைஞர்கள் குறித்த திருமண மண்டபத்தினுள் புகுந்து அங்கு அடுத்த தினம் ஏற்பாடாகியிருந்த திருமண நிகழ்வொன்றிற்கான ஏற்பாடுகளை அடித்து நொருக்கினர்.பின்னர் அங்கு நின்றிருந்த மண்டப முகாமையாளரான ஓய்வு பெற்ற கிராம அலுவலரொருவரை மிக மோசமாக தாக்கியிருந்தனர்.குறித்த நூலின் பிரதிகள் இலங்கையினில் குறித்த மண்டபமே விநியோகித்ததாக குற்றஞ்சாட்டியே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தினையும் இராணுவப்புலனாய்வு பிரிவினர் தூண்டிவிட்டுக்கொண்டிருந்ததை அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள் நேரினில் கண்டுள்ளனர்.குறிப்பாக புலம்பெயர் தேசத்துறவுகள் தாயகத்திற்கானவுதவிகளை இவ்வாறான ஆலயங்கள் மண்டபங்களுடாக மேற்கொள்வதுடன் தொடர்பாடல்களையும் பேணிவருகின்றன. அதனை முடக்கும் வகையினில் இத்தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடபபட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten