[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:50.06 AM GMT ] [ விகடன் ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்குள் புகுந்து குண்டர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமான செயல் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் கூட்டமைப்பினர் நடத்தும் கூட்டங்கள் அஹிம்சைப் போராட்டங்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும், நடைபெற்ற அடக்குமுறைத் தாக்குதலுக்கு ஒப்பான இவ்வாறான தாக்குதல்கள் அங்கு ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குமுறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கிளிநொச்சி அலுவலகத்தில் ஜனநாயக முறைப்படி நடத்திய கூட்டத்திற்குள் புகுந்து குண்டர் குழு அராஜகம் புரிந்துள்ளமை காட்டுமிராண்டித்தனமான செயல்.
மேலும், அங்கு குண்டர் குழு தாக்குதல் நடத்தியபோது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அவர்களைக் கைது செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்தனர் என்றும் தாக்குதல் நடத்தியோரில் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் பொலிஸார் அவர்களை விடுவித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பொலிஸாரின் செயற்பாட்டைப் பார்க்கும் பொழுது இது ஒரு திட்டமிட்ட செயல் என்பது வெளிப்படையாகிறது.
அத்துடன், மடக்கிப் பிடிக்கப்பட்ட ஒருவர் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சார்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் உறுதியானது என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது அரச ஆதரவுக்குழு என்ற எண்ணத் தோன்றுகிறது.
இச்சம்பவம் குறித்து உடனடியாக அரசு முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
http://news.lankasri.com/show-RUmryDQUNZit3.html
உகண்டா நிலை இலங்கையில் ஏற்படும் சூழ்நிலையா? சி.பாஸ்கரா
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:30.03 AM GMT ]
இது இலங்கையின் வகிவாக்கியம் அகல பாதாளத்திற்கு செல்வதற்கான காரணமாக அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக இலங்கையில் நடைபெற்றுவரும் அசாதாரண சூழ்நிலைகளும் இனவாத மதவாத செயற்பாடுகளும் இலங்கையின் வகிபாக்கியம் கேள்விக்குறியாக மாறுவதற்கான சூழ்நிலையினை காட்டுகின்றது.
உதாரணமாக சொல்லப்போனால் முஸ்லீம் வர்த்தகர்களின் கடைத்தொகுதிகள் தாக்கப்படுவதும், வேலை செய்தோர் அச்சுறுத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் ஜீரணிக்கக் கூடியதுமல்ல.
இதனை மேலும் விரிவாகப் பார்ப்போம். ஆனால் உகண்டாவில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் அங்கு இருந்த காடையர்கள் அந்த நாட்டின் செல்வந்தர்களாக இருந்த இந்தியர்களின் கடைகளை உடைத்து அவ்விந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வழிசமைத்தனர்.
அதேபோல் இலங்கையிலும் அசாதாரண சூழ்நிலைகளை உற்றுநோக்கும் போது இலங்கைக்கும் அவ்நிலை ஏற்படும் என அஞ்சத் தோன்றுகின்றது.
இவ்வேளையில் சிறுபான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையான செயற்பாடுகளை மேலும் மேலும் இவ் அசாதாரண சூழ்நிலை எற்படாமல் தடுக்க வழிசெய்யும்.
இவ்வேளையில் கூட கிழக்கு மாகாணத்தில் அரசுடன் சேர்வதற்காக வியாக்கியானங்களை தேடி தெரிவித்தது போல் இவ்வேளையும் பசுப்பு வார்த்தைகள் கூறிக் கொண்டிருப்போம்.
ஆனால் இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பே கேள்விக்குறியாக மாறிவிடும் எனத் தெரிவித்தார்.
http://news.lankasri.com/show-RUmryDQUNZit2.html
Geen opmerkingen:
Een reactie posten