தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

யாழில் ஆதிக்கம் செலுத்தும் சீனா – (படங்கள்) !



யாழ். பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் சீனா அரசாங்கத்தினால் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டன. யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் சம்பிரைதாய பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சீன அரசாங்கத்தின் முதலாவது செயலாளர் கியூ கியூபிங்க வடமாகாண ஆளுநர் மற்றும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவிடம் பெயர்ப்பலகையினை கையளித்து வைத்ததுடன் உசாத்துணை நூல் பகுதியினையும் நாடாவெட்டி திறந்து வைத்தார்.

சுமார் 20 மில்லியன் ரூபா நிதியில் குளிரூட்டிகள் மற்றும் கணணிகள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரம் உட்பட பல்வேறு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. இதன்போது யாழ் மாநகர சபை யாழ் நினைவுச் சின்னத்தினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி சீன அரசாங்கத்தின் முதலாவது செயலாளர் கியூ ஸ்கியூபிங்கிற்கு வழங்கினார். இந்நிகழ்வில் பொது முகாமையாளர் செங் ஜெய்ன் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்சுமி மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் சீன அரசாங்கத்தின் புகையிரத புனரமைப்பு அதிகாரிகள் மற்றும் பொது நூலக உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை பரவ ஆரம்பித்துள்ளது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4768

Geen opmerkingen:

Een reactie posten