ஈழம் தொடர்பான கனவு கலைந்த காரணத்தினால் சிலர் சர்வதேச ரீதியாக நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனர்.
இலங்கை வெளியுறவுக் கொள்கைகளினால் சர்வதேச ரீதியாக அழுத்தம் ஏற்பட்டள்ளதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRWNZmwy.html
இந்தியாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்னை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்!– ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 02:14.22 AM GMT ]
இந்தியாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு தம்மைப் பயன்படுத்திக் கொள்ள சில முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பேய்க்கு பயமென்றால் ம
யானத்தில் வீடுகள் அமைப்பதில்லை.
எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.
இது தொடர்பில் நாம் ஒருபோதும் அச்சமடையத் தேவையில்லை.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயங்கரவாதத்தை இல்லாதொழித்துள்ளது.
பிளவடைந்திருந்த நாட்டை ஒரே தேசமாக மாற்றியுள்ளோம்.
பொய்களுக்கு வதந்திகளுக்கு பாரியளவு சக்தி காணப்படுகின்றது.
எனினும் இதனை வெற்றிகொள்ள கட்சி என்ற ரீதியில் எங்களால் முடியும்.
கட்சியை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
கட்சியின் செயலாளர் உள்ளிட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல உள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன.
எனினும், இது தொடர்பில் அவர்களிடம் கேட்ட போது அவ்வாறான திட்டம் கிடையாது என தெரிவிக்கின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் செயற் திட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRWNZms4.html
Geen opmerkingen:
Een reactie posten