உண்மை காரணம் இது!
அது எண்பதுகளின் காலம் ..! புலிகளின் திருநெல்வேலி கண்ணிவெடித்தாக்குதலுக்கு பின் தமிழ் ஈழவிடுதலைப் புலிகள்,டெலோ,.பிளட் ,ஈ.பி.ஆர்.எல் எவ்.போன்ற இயக்கங்கள் தமிழகத்தை தளமாக கொண்டு தமது போராட்டங்களை நகர்த்திவந்தன.அப்போது கலைஞர் அவர்கள் ஒரு ‘ஸ்டன்ட்’ அடித்தார்.அதாவது தானும் இந்த போராட்டத்துக்கு எதோ செய்கிறேன் என்று காட்டுவதுபோல் புலிகள் அமைப்பு உட்பட ஒவ்வொரு இயக்கத்துக்கும் 50000 ரூபா வழங்கவிருப்பதாக புறாவின் காலில் செய்தியைக் கட்டி அனுப்பினார்..ஒவ்வொரு இயக்கத்துக்கும்.மத்திய அரசுகூட ஒவ்வொரு இயக்கத்திலும் இருந்து பலரை அழைத்து உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு ஒதுக்குப் புறத்தில் இந்திய ராணுவத்தின் மூலம் 1983 இல் பயிற்சி கொடுத்தது.அதன் பின்பே கலைஞரின் அறிவிப்பு வந்தது.அப்போது எமது தலைவர் அவர்கள் சென்னையில்தான் இருந்தார்.
டெலோ உட்பட எல்லா இயக்கங்களும் கலைஞரிடம் இருந்து பணத்தை பெற்றன.ஆனால் புலிகள் இயக்கம் மட்டும் அதை பெறவில்லை..ஒரு கெரில்லா இயக்கத்துக்கு, ஒரு நாட்டின் முப்படைகளுக்கும் எதிராக போராடுவதற்கு மிக நவீன ஆயுதங்கள் தேவை.கலைஞர் தரும் ஐம்பதினாயிரம் ரூபாவை வைத்துக் கொண்டு அப்போது மூன்று ஏ.கே .கூட வாங்கமுடியாது.
அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.அப்படிஎன்றால் கலைஞரின் உண்மை நோக்கம் என்ன? தமிழ் ஈழ விடுதலைக்கு தானும் உதவுகிறேன் என்று காட்டிக்கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டு, அவர்களின் வாக்குகளை தேர்தலில் சேகரிக்கும் நரித்தனம் அது.இதை தலைவர் நன்கு உணர்ந்தே அந்த பணத்தை சென்று வாங்கவில்லை.அதுமட்டுமல்ல! சகோதர யுத்தம்..சகோதர யுத்தம் என்று கலைஞர் அதன்பின் சொல்வதன் அடிப்படையும் இதுவே.நான் காசு கொடுத்து வாங்காமல் எம்.ஜி.ஆர் கொடுத்ததும் வாங்குகிறார் பிரபாகரன் என்னும் மன வெக்கைதான் அது.மன உளைச்சல்தான் அது.
ஆனால் எம்.ஜி.ஆரோ எந்த விளம்பரமும் இல்லாமல் தலைவரையும் அன்டன் பாலசிங்கம் அண்ணனையும் அழைத்து கோடி கோடியாக தனது வீட்டில் வைத்தே பலமுறை அள்ளிக் கொடுத்தார்.எம்.ஜி.ஆரின் பணத்தில்தான் இந்தியாவில் பயிற்சி பெற்று வெளிவந்த 2-3 புலிகள் அணியினருக்கு ஆயுதங்கள் வாங்கப் பட்டன.அப்படிஎன்றால் எத்தனை கோடிகளை காதும் காதும் வைத்தவாறு அள்ளிக் கொடுத்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.கலைஞரோ ஐம்பதினாயிரத்தை கொடுத்துவிட்டு அதன் மூலம் அரசியல் அறுவடை செய்யப் பார்த்தார்.தலைவர் அதை நன்கு புரிந்து கொண்டார்.அது மட்டுமல்ல
சென்னைத் துறைமுகத்துக்கு அப்போது ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் புலிகளுக்கு வந்து கொண்டிருந்தது.காவல் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவை பிடிபட்டால் எவ்வளவு நஷ்டம் வரும்?
எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியை நாடி ஓடினர் புலிகள்.விஷயத்தை சொன்னார்கள்.
கப்பலைச் சோதனை செய்யாமல் இருக்க உதவி புரியுமாறு கேட்டனர்.கப்பலில் உள்ள சாமான்களை சென்னையில் எங்கே அனுப்ப போகிறீர்கள்? என்று கேட்டு முகவரியை குறித்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.என்ன ஆச்சரியம்? காவல் துறையின்
பாதுகாப்புடன் ஒருநாள் நள்ளிரவில் திருவான்மியூரில் தலைவர் இருந்த வீட்டில் அத்தனை ஆயுத பெட்டிகளும் வந்து இறங்கின.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர் அவர்களின் உதவி அப்போது இல்லையென்றால் அத்தனை தூரம் புலிகள் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது.புலிகள் எம்.ஜி.ஆரை நாடியதே கலைஞருக்கு தலைவர் பிரபாகரனின் மேலுள்ள விரோதம் ஆகும்.அதனால்தான் டெலோ போன்ற இயக்கங்களை கலைஞர் வளர்த்துவிட அரும்பாடு பட்டார்.ஆனால்,முடியவில்லை.தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவினேன்..உதவினேன் என்று கலைஞர் இப்போதும் கூட சொல்வது டெலோ போன்ற இயக்கங்களுக்கு செய்ததைத்தான்.இதுதான் பிரபாகரன் மீது கலைஞருக்கு உள்ள நீண்ட கால கோபமும், விரோதமும் ஆகும்.ஆனால்,கலைஞரின் மீது தலைவர் ஒருபோதும் விரோதம் கொள்ளவில்லை.அவரை நன்கு புரிந்துகொண்டார் ..அவ்வளவுதான்!

http://asrilanka.com/2013/03/24/16167
Geen opmerkingen:
Een reactie posten