தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

1986 – 1990 காலப்பகுதியில் இறந்தவர்களின் எலும்புக்கூடுகளே மீட்பு


மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தினுள் கூட்டு புதைகுழியில் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 1986ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களுடையது எனக் கூறும் இரு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக மாத்தளை நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சத்துரிக்க டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.
அவர் இந்த புதைகுழிப் பகுதியில் உள்ள பொலிஸ் பாதுகாப்பை நீக்குமாறு பணித்தார். களனி பல்கலைக்கழக புதைபொருள் நிறுவனத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன ஆகியோர் அனுப்பிய அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

Geen opmerkingen:

Een reactie posten