தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 maart 2013

ராஜபக்ஸ, எதுக்கு இந்த மமதை? மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் முழங்கிய மூதாட்டி!


நேற்றைய தினம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாபெரும் மாணவர்கள் போராட்டம் ஒன்று உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனாவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினார்கள்.
திரண்டிருந்த மாணவர்கள் மத்தியில் பலரும் எழுச்சி உரை ஆற்றினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த பாட்டி ஒருவர் மாணவர்கள் மத்தியில் எழுச்சி பூர்வமாக பேசினார்.
jvp indan


அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று… என்ற பாடலைப் பாடிய போது மாணவர்கள் எல்லோரும் ஆர்ப்பரித்தனர்.
காமராஜர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகளைப் புகழ்ந்த பாட்டி மஹிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சித்தார்.
ராஜபக்ஸ உனக்கு எதுக்கு இவ்வளவு பிண ஆசை…. திமிர்… ஏண்டா உனக்கு இந்த ஆணவம்.. மமதை…. வளமோடு இருந்தால் வளமாக வாழலாம்…. அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டா அமிர்தமும் விஷம்… அளவுக்கு மீறி சொத்து சேர்த்தா உயிருக்கே ஆபத்து…
இவ்வளவு மக்களையும் கொன்றதற்கு நீயே தூக்குப் போட்டுச் சாவு…. ஆணவத்தால அழிவு தான் மிஞ்சும் என்று பேசிய பாட்டிக்கு மாணவர்கள் செம ரெஸ்பொன்ஸ் கொடுத்தார்கள்…
கொளுத்தும் வெயிலில் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் நின்று போராடிய பேரப்பிள்ளைகளுக்கு பாட்டி கொடுத்த உற்சாகத்தை வாரத்தைகளில் சொல்ல இயலாது.
அங்கு குழுமியிருந்த பொலிஸாரும் பாட்டியின் பேச்சை வெகுவாக ரசித்தார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten