தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 maart 2013

ஐநாவின் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்த 2014ம் ஆண்டு வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த எதிர்வரும் 2014ம் ஆண்டு வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தியதா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் அமர்வுகளின போது ஆராயப்பட உள்ளது.
மனித உரிமைப் பேரவையினால் இவ்வாறு நாடொன்றுக்காக விசேட அமர்வு ஒன்றை நடாத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வடக்கு அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும் , நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய எந்தவொரு பரிந்துரையும் அமுல்படுது;தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு 26 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

http://www.tamilwin.net/show-RUmryDRXNZmx0.html

Geen opmerkingen:

Een reactie posten