[ தினமலர் ]
இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த சண்டையின் போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா 2010ல், ஜனாதிபதி தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டதால், ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, 2 ஆண்டுகள் இராணுவ சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது புதிய கட்சி தொடங்கியுள்ள சரத் பொன்சேகா, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
லண்டனை சேர்ந்த, தனியார் "தொலைக்காட்சியில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின், 12 வயது மகன் பாலசந்திரன், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட காட்சி ஒளிபரப்பானது. இந்த காட்சி ஜோடிக்கப்பட்டது.
பாலசந்திரன் பக்கத்தில் நிற்கும் வீரர் அணிந்திருக்கும் சீருடையை, எங்கள் இராணுவ வீரர்களுக்கு நாங்கள் வழங்கவில்லை. இந்த சீருடை, இந்தியா இராணுவத்தினர் அணிவது. இது போன்ற சீருடைகளை கள்ளத்தனமாக பயன்படுத்தி, விடுதலை புலிகள் இறுதி கட்ட சண்டையில், ஈடுபட்டனர்.
இலங்கை இராணுவம் பயன்படுத்திய பதுங்கு இடங்கள் மிகவும் சிறியவை. பாலசந்திரன் அமர்ந்திருக்கும் இடம், சுத்தமாகவும், பெரியதாகவும் உள்ளது. அது போன்ற பதுங்கு அரண்கள், இலங்கை இராணுவத்திடம் கிடையாது.
எனவே, இந்த படம் போலியானது. இலங்கை போர் தொடர்பாக, எந்த விதமான சர்வதேச விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். முன்னாள் தளபதி என்ற முறையில் எனக்கும் இந்த பொறுப்பு உள்ளது. இலங்கை அரசு, போர் குற்றம் தொடர்பான விசாரணையை சந்திக்க தயங்குகிறது. இறுதி கட்ட சண்டையின் போது என்ன நடந்தது என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர்.
இந்த சந்தேகம் களையப்பட வேண்டும். போர் குற்றம் தொடர்பான விசாரணை சந்திக்க மறுத்தால், இலங்கை அரசு எதிர்காலத்தில், ஏராளமான சர்வதேச குற்றச்சாட்டுக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRVNZnx5.html
Geen opmerkingen:
Een reactie posten