தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 maart 2013

பிரித்தானியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கும் உதவித் தொகை விதிகள் கடுமையாக்கப்படும்!- பிரதமர்


பிரித்தானியாவில் வந்து குடியேறும் வெளிநாட்டினருக்கு கொடுக்கப்படுகின்ற அரச உதவிப் பணம் சம்பந்தமான விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார்.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் இருந்து பிரிட்டனில் வந்து குடியேறியவர்களுக்கு, வேலை கிடைக்கும் என்பதற்கு நியாயமான வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில், வேலை தேடுவோருக்கான வாழ்வாதார உதவித் தொகை ஆறு மாதங்களுடன் நிறுத்தப்படும்.
அத்துடன், அரசுக்கு வரி செலுத்தாமல் வேலை பார்ப்பதற்கு எதிராகவும் விதிகள் கடுமையாக்கப்படுகின்றன.
பிரிட்டனில் இருந்து வெளியேறுபவர்களை விட பிரிட்டனுக்குள் வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறிய பிரதமர், ஆனாலும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பதற்காக பிரிட்டன் வருபவர்களை அரசாங்கம் வரவேற்கவே செய்கிறது என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மையில் சேர்ந்துள்ள பல்கேரியா, ரொமேனியா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று குடியேறுவதில் இருந்து வந்த தடை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் விலகும் என்ற நிலையில், பிரிட்டனுக்குள் நிறைய பேர் புதிதாக வந்து குடியேறலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten