காவிரி கரையில் ராஜபக்ச, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர்.
காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள்.
தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கதறி அழுதார்கள்.
பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்து கைக்குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்கள்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘இந்த மூன்று பேரும் ஒரு இனத்தையே கருவறுத்தவர்கள். இவர்களுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. தன் கணவனை இழந்ததற்காக ஒரு இனத்தையே அழித்த சோனியா, சர்வதேச புரோக்கர் சுப்பிரமணிய சுவாமி, வில்லன் ராஜபக்ச இந்த மூன்று பேரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தரும் வரை தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பு ஓயாது என்றார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten