வடக்கில் காணாமற்போன தமிழர்கள் 36 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளது. எனினும் அந்த விடயம் இதுவரையில் இலங்கையில் உள்ள உறவினர்கள் எவருக்கும் தெரியப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
மதவாச்சியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் போதும் அதற்கு முன்னரும் போரின் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கையில் காணாமற்போயுள்ளனர்.
இவர்களுக்கு என்ன நடந்தது என்று அறிய உறவினர்கள் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர்.
இலங்கையில் காணாமற் போனோரைத் தேடியறியும் குழு, இது குறித்து 2008 ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கிளை அமைப்பான காணாமல் போனோர் தொடர்பான குழுவிடம் முறையிட்டது.
எமது முறைப்பாடு தொடர்பாக ஜெனிவா குழுவால் 2009 ஏப்ரல் 14ம் திகதி இலங்கை அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. 2012 ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கொழும்பு அதற்குப் பதிலளித்துள்ளது.
காணாமல் போனார்கள் என்று அறிவிக்கப்பட்ட 37 பேர் அரசால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது பற்றி இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு எந்தத் தகவலும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார் காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலர் சுந்தரம் மகேந்திரன்.
நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகச் சென்ற சமயம் இலங்கை அரசின் பதில் குறித்துத் தாம் அறிந்து கொண்டார்கள் என்று அவர் கூறினார்.
"பலவந்தமாக அல்லது தன்னிச்சையாகக் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவின் செயலாளரை ஜெனிவாவில் உள்ள வில்சன் மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினோம். இலங்கை அரசின் பதில் அச்சமயத்தில் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இலங்கை அரசின் தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக இலங்கை அரசு வழங்கிய 37 பேரின் உறவினர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களின் உறவுகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள விவரம் அவர்களுக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார் மகேந்திரன்.
சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசால் ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ள காணாமல்போன 37 பேரின் பெயர் விவரங்கள் வருமாறு:
01. வைகுந்தகுமார் வைகுந்தராசன் (கொடிகாமம் 840744604V),
02. பரிமேலழகர் கந்தசாமி (மந்துவில் 771014020V),
03. ராஜ்குமார் ராமச்சந்திரன் (கொடிகாமம் 821652928V),
04. பார்த்தீபன் பொன்னம்பலம் (மந்துவில் 841964349V),
05. சிவானந்தன் செல்வரட்ணம் (மந்துவில் NA 565027),
06. ரசிகரன் சோமலிங்கம் (வல்வெட்டித்துறை 840165361V),
07. ஸ்டீபன் ஜயசிங்க (மதவாச்சி 662451479V),
08. புஸ்பகாந்தன் மார்க்கண்டு (மந்துவில் 801202233V),
09. கணேஸ் சுவேந்திரன் (கரணவாய் வடக்கு 838584134V),
10. சுப்பிரமணியம் புஸ்பதீபன் (வல்வெட்டித்துறை 810261560ங),
11. பேரின்பராசா நடராசா (வவுனியா 730174071V),
12. நிசாந்தன் அபிராஜ் (வவுனியா),
13. சற்குணராஜன் ஆனந்தராஜா (வவுனியா 850782555V),
14. சிவபாலன் கதிரேசன் (தெஹிவளை 651451577V),
15. மோகன் நாகரத்தினம் (மந்துவில் 00809),
16. மகிந்தன் பூபாலசிங்கம் (வடலியடைப்பு 820404440V),
17. சுதாகரன் ராசலிங்கம் (வவுனியா 820871111V),
18. தேவராசா ராஜேந்திரம் (மந்துவில் 713503770V),
19. சிவசக்தி சபாபதிப்பிள்ளை (வவனியா 572353508V),
20. சுதாகரன் சக்திவேல் (வவுனியா),
21. சதீஸ் செல்வராசா (சாவகச்சேரி 861312372V),
22. துரைசிங்கம் சின்னத்துரை (வவுனியா 582883860ங),
23. தங்கராசா சிவசுப்பிரமணியம் (யாழ்ப்பாணம் 593321916V),
24. துரைசிங்கம் சோமசுந்தரம் (வவுனியா 592181860V),
25. பற்குணானந்தன் சுகிதன் (யாழ்ப்பாணம்),
26. உதயகுமார் சுப்பையா (வவுனியா),
27. குமாரசிங்கம் தர்சிகன் (மந்துவில் 880400126V),
28. தில்லைராஜன் தில்லையம்பலம் (வாரிக்குட்டியூர்),
29. வாணகாந்தன் வர்ணகுலசிங்கம் (சாவகச்சேரி 853432911V),
30. சதீஸ்வரன் யோகராசா (வவுனியா 812591258V),
31. சிவச்சந்திரன் சுப்பிரமணியம் (பெரியபோரதீவு 790650271V),
32. முகுந்தன் சிவஞானன் இரத்தினம் (கரவெட்டி 760110612V),
33. இராஜேந்திரன் சேகர் (வவுனியா 760143430V),
34. தங்கராசா ரகு (வவுனியா 742372863V),
35. உமாகாந்தன் நாகராசா (வவுனியா 740291068V),
36. கோவிந்தராசா கிருபாகரன் (பருத்தித்துறை 851123938V),
37. உதயகுமார் முருகமூர்த்தி (பழுகாமம் 792074537V),

இவர்கள் தொடர்பில் இலங்கை அரசு கூறிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள உறவினர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க வேண்டும் என்றும் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
http://www.lankawin.com/show-RUmryDRXNZlo3.html
Geen opmerkingen:
Een reactie posten