தெற்கிலிருந்து வடக்கிற்கான திபெத் ஆன்மீகத் தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையிலான சமாதானப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நிறைவடைந்துள்ளது.
கடந்த 06ம் திகதி இந்த சமாதானப் பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவின் பங்கேற்றலுடன் வெற்றி கொண்ட சமாதானத்தை உறுத்திப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பேரணி கதிர்காமத்தில் ஆரம்பமானது.
இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, மற்றும் வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 மேற்பட்டவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
கடந்த 25 நாட்கள் நடை பயணத்தின் பின்னர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த இந்த சமாதானப் பேரணி இன்று காலை யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து யாழ் நாகவிகாரையை வந்தடைந்தது.
அங்கு சமாதானப் பேரணியை வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, ஆகியோர் வரவேற்றனர்.
தொடந்து பேரணி ஸ்ரான்லீ வீதி, மணிக்கூட்டுக்கோபுர வீதியூடாக வைத்தியசாலை வீதியைச் சென்றடைந்து அங்கிருந்து காங்சேன்துறை வீதியூடாக யாழ் கோட்டையைச் சென்றடைந்தது.
இந்த சமாதானப் பேரணிக்கு ஜனாதிபதி செயலகம், இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளம், இளைஞர்களுக்கான நாளை அமைப்பு ஆகியன ஆதரவு வழங்கியிருந்தது.
அத்துடன் இந்த சமாதானப் பேரணியில் யாழ்ப்பாணத்தில் பெருமளவான புலனாய்வாள்ர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten