தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

நாகரீகமான ஆடைகளை அணிந்து வருமாறு ஹிருனிகாவிற்கு நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.


நாகரீகமான ஆடைகளை ஒழுங்காக அணிந்து வருமாறு கொல்லப்பட்ட பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிகாவிற்கு நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் பிரகர்ஷ ரணசிங்க இந்த அறிவுறுத்தலை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளார்.பொரளையிலுள்ள வர்த்தக நிறுவன உரிமையாளரொருவரை மிரட்டி தாக்கினார் என்ற குற்றசாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஹிருனிகா ஆஜராகினார்.
இதன்போதே மேலதிக நீதவான் இந்த ஆலோசனையை வழங்கினார். இளஞ் சிவப்பு நிற குர்தா மற்றும் காற்சட்டை அணிந்து இன்றைய வழக்கு விசாரணைக்காக ஹிருனிகா ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த வர்த்தகரை பயமுறுத்தி தாக்கியதாக கூறப்படும் ஹிருணிகா மற்றும் நால்வர் மீதான வழக்கு நீதவானினால் இணக்கப்பட்டுக்கு அனுப்பப்பட்டது.
முறைப்பாட்டாளர் இந்த பிரச்சினையை இணக்க முறையில் தீர்க்க முடியும் என கூறியதாக பிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பாதிப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மறுத்தார். ஆயினும் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு முறைப்பாட்டாளரான தம்மிக்க செனவிரத்னவிடமிருந்து மன்னிப்பு கேட்டால் மாத்திரமே இணக்க வழி தீர்வை பற்றி கவனத்தில் எடுக்க முடியும் என நீதவான் கூறினார்.
ஆத்துடன் சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், அவர்கள் இணக்க சபைக்கு போக வேண்டும் எனவும் ஜுலை 31ஆம் திகதி இணக்க சபையின் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தவிட்டார்.
01(779)
jvp



























Geen opmerkingen:

Een reactie posten