கைதிகளின் கால்களைக் கழுவி, முத்தமிட்டு ஆசிர்வதிக்கும் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் நேற்று ரோமிலுள்ள சிறைச்சாலையின் இளம் கைதிகளை சந்தித்து அவர்களின் கால்களை கழுவி, முத்தமிட்டு ஆசீர்வதித்துள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய தினமான ஈஸ்டரை முன்னிட்டு புனித வியாழனிலேயே இவ்வாறு 12 கைதிகளை ஆசிர்வதித்துள்ளார். புனித வியாழனில் இயேசு 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டுள்ளார். அதனை நினைவு கூரவே புதிய பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இவ்வாறு நடந்கொண்டுள்ளார்.
இதன் மூலம் வத்திக்கானில் இதுவரையில் இருவந்த மரபுகளை இவர் தகர்த்துள்ளார். இதற்கு முதல் பாப்பரசரின் கால்களை கழுவி முத்தமிடுவதுவே வழக்கமாக இருந்துள்ளது. பாப்பரசர் இவ்வாறு ஆசிர்வதித்த கைதிகள் 12 பேரும் 14-21 வயதிற்குட்பட்டவர்கள். என்பதுடன் அதில் 2 பெண் சிறுமிகளும் மற்றும் முஸ்லிம்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று அவர் ஆர்ஜென்டீனாவிலுள்ள சிறைச்சாலையிலும் ஆசீர்வதித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வுகளின் போது அங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பாப்ரசர் முதலாம் பிரான்ஸிஸ் கைதிகளிடம் கூறுகையில், நான் இங்கு உங்களுடன் இருப்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். வாழ்கையில் துவண்டு விடாதீhகள் நம்பிக்கையாக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten