தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 maart 2013

யாழ்.கொக்குவிலில் இரு குழுக்களிடையே வாள் சண்டை!- இளைஞன் படுகாயம்


யாழ்.கொக்குவில் பிரதேசத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற கடுமையான வாள் சண்டையில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் பல இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினமும் யாழ்.கொக்குவில் தேங்காய் மூலைப் பகுதி இளைஞர்களுக்கும் கொக்குவில் ஆறுகால் மடத்தடி இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
அம் மோதல் சம்பவம் உச்சமடைந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளிலில் கொக்குவில் ஆறுகால் மடத்தடி இளைஞர்கள் குழு சென்று கொக்குவில் தேங்காய் மூலைப் பகுதி இளைஞர்கள் மீது வாள்வெட்டு நடத்தியது.
இச் சம்பவத்தில் ம.சுகேதன் (வயது 23) என்பவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் சில இளைஞர்கள் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் கொக்குவில் தேங்காய் மூலைப் பகுதி இளைஞர்கள் ஆறுகால் மடத்தடியில் இருந்து வந்து வாள்வெட்டு நடத்திய ஒருவருடைய வீட்டிற்குள் புகுந்த அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் உடைத்து நாசம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொது மக்களால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல பல மணி நேரம் சென்ற பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினராலும் மேதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இராணுவத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்றதும் நிலைமை ஓரளவு சமரசத்துக்கு வந்தது. இரவு 1 மணிவரையில் மேற்படி மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் முழுவதும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://news.lankasri.com/show-RUmryDRaNZkty.html

Geen opmerkingen:

Een reactie posten