இவர்கள் பலரை பலி கொடுத்து தவறான வழியில் போராட்டத்தை திசை திருப்பி அமெரிக்காவிடம் அடிபணிந்து போரிலும் தோற்றனர்,வீழுந்தாலும் மீசையில் மண்படாமல் ஆனந்த சங்கரியை தூற்றவும் அப்பாவிகள் சாகடிக்கப்படவில்லை,துரோகி என்று கொள்ளப்படவில்லை ,துரோகிகள் விரைவில் இனம் காணப்படுவர்!
ஆனந்த சங்கரி தமிழ் சமூகத்திற்கு செய்த தவறுகளை மன்னிப்பது யதார்த்தம் ஆனாலும் நியாயப்படுத்துவது எந்த அளவு நியாயம் சங்கரி என்பவர் சிங்கள அரசின் முகவர் என்பதுடன் தமிழ் மக்களை குழப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுப்பப்பட்டவர் என்பது சகலரும் நன்கறிந்த விடயம் ஆனாலும் இன்றைய சூழ் நிலையில் ஜநா தீர்மானத்தில் இந்தியா நடு நிலை வகிக்க வேண்டும் என்பதுடன் மகிந்த அரசுக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு நிகராக ஆலோசனை வழங்கியதை யாரும் மறுப்பதற்கு முடியாது இவ்வாறான நிலையில் இன்று வரை பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத இவருக்கு பாதுகாப்பும் கொழும்பில் தங்குமிடமும் வழங்கியதை நன்கறிந்தவர்கள் என்பதுடன் அன்மைய நாட்களில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பல்ல என வரிக்கு வரி விமரிசிக்கும் இவரை எதற்காக பல்லக்கில் வைத்து பவணி எடுக்க நினைப்பது இவ்வாறான பச்சைத் துரோகியை உள்வாங்கினால் என்ன நடக்கும் என சுரேஸ் செல்வம் அறிந்தும் அறியாமல் இவரின் பாதையில் செல்லத் தயாராவது எதற்காக ஜெனிவா வந்திருந்த வேளையில் இவர்கள் இருவரும் கூறிய கூற்று நாடு திரும்பியவுடன் சங்கரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றது அவரின் பின்னால் பிரிவதா அர்த்தம்
சங்கரி ஜயா இல்லாமல் கூட்டமைப்பு இல்லை என அடம் பிடிக்கும் வினே சிவசக்தி ஆகியோர் மக்களைப் பற்றி சிந்திப்பதை விட தமது பாராளுமன்ற பதவிக்காலத்தில் ஜயாவைப்பற்றி சிந்தித்த நாட்கள் அதிகம் இந்த ஜயாவின் நரித்தனத்தை பற்றி அறிந்தும் எம் மக்களை முள்ளிவாய்க்காலை விட அதிக அழிவிடத்திற்கு அழைத்துச் செல்வது நியாயமா?
இவ்வாறான நிலையில் நிதானமான முடிவை எடுப்பது சகலரினதும் கடமை என்பதுடன் இழப்பதற்கு எதுவுமில்லை அரசியல் பலத்தையும் இழப்பது எதிரியை பலப்படுத்தும் செயல் என்பது மட்டும் உண்மை
தமிழரசுக் கட்சியிலும் தவறுகள் உள்ளன என்பது உண்மை கட்சி பதிவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு இக் கட்சியே முழு பெறுப்பு இருந்தாலும் தவறுகளை நீண்ட நாட்களுக்கு சகிக்க முடியாது ஆனாலும் சரியானவர்iளை இனங்கான்பது கட்டாயம் இயலுமான வரை இனைந்திருந்து தமிழர்களின் பலத்தை பன் மடங்காக்குவது சகலரினதும் கடமை என்பதுடன் இவை தொடர்பான சில வாத பிரதி வாதங்களை அவதானிப்பது கட்டாயம்
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான விடயங்கள் ஆரோக்கியமானதாக இருக்காதென்றும்’ தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட தமிழரசு கட்சி தனியாக பதிவு செய்வது ஆரோக்கியமானதாக இருக்குமா? என்றும், இரு கட்சிகள் வெளியேற்றுவதாகவும் கூறப்படுகின்றது? என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த 26ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போது அவர்களுக்கான திகதியை அவர்களால் சரியாக குறிப்பிட முடியாது போனது. ஆனால் விரைவில் கலந்துரையாடவுள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்கனவே 4 கட்சிகளாக இருந்தன. அதிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்சி வெளியேறிய பின்னர் தலைவர் இராம சம்பந்தனின் முயற்சியால் புளொட் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன உள்வாங்கப்பட்டன.
அதற்குப் பின்னர் அவர்கள் உள்ளுராட்சி தேர்தல்கள் மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்கள். அதில் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களை இப்போது வெளியேற்றுவதென்பதை சரியான நிலைப்பாடாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை கூட்டாக தேர்தலை கேட்டு அவர்களில் சில அங்கத்தவர்களும் உள்வாங்கப் பட்டுள்ளார்கள்.
அதனால் அவ்வாறான சூழிநிலையில் அவர்களை வெளியேற்றுவததென்பது சாதமானதாகவும், சரியானதான நிலைப்பாடாக இருக்க மாட்டாதென அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய முரண்பட்ட தொனியில், கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாவதாக இருக்கின்றது.
இவ்வாறான விடயங்களை மாற்றப்பட வேண்டியதென்பது உண்மை, பேசபட்ட வேண்டிய தென்பதும் உண்மை, அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்த வேண்டுமென்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது ஆரோக்கியமாக இருக்காதென்று நினைக்கின்றேன்’ என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten