தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 maart 2013

அனைத்து இன மக்களின் மத உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!- ஜனாதிபதி


நாட்டில் அனைத்து இன மக்களினதும் மத உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மக்களின் மத உரிமைகளையும், கலாசார அடையாளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் அனைத்து இன மக்களினதும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பிரதேசத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரைகளை ஆற்றிய போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அரந்தலாவை பகுதியில் 31 பௌத்த பிக்குகளும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டமையை நினைவு கூறும் வகையில் இடம்பெற்ற நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அரந்தலா நினைவு தூபி ஒரு இனத்தவர்களுக்கு மாத்திரம் அடையாளம் இல்லை என்றும் உலகில் அமைதியை எதிர்ப்பார்க்கும் மக்களின் அடையாளம் என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிரியை நேசிக்கும் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten