இதற்கு அமைவாக இந்தியப் பாராளுமன்றம் மதியம் 2.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ இடம் திமுக அமைச்சர்கள் தமது ராஜினாமாக் கடிதங்களை கையளித்துள்ளார்கள். இதனையடுத்து திமுக நிச்சயம் விலகிவிட்டது என்பது திட்டவட்டமாக அறியப்பட்டுள்ளது. அதாவது இந்திய நாடாளுமன்றில் 540 ஆசனங்கள் உள்ளது. இதில் 270 ஆசனங்களை எக் கட்சி கைப்பற்றுகிறதோ அக் கட்சியே ஆட்சியினை அமைக்க முடியும். தற்போது உள்ள நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு 295 ஆசனங்கள் உள்ளது. திமுக வில் உள்ள 18 எம்.பீக்கள் வெளியேறினால், 277 ஆசனங்களே இருக்கும். காங்கிரஸ் அரசு கவிழாது. ஆனால் இதில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடியின் (22 ) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (21) எம்.பிக்களும் அடங்கும். இந்த இரண்டு கட்சியில் ஏதாவது ஒரு கட்சி தமது ஆதரவை விலக்கிகொள்வோம் என்று அறிவித்தால் போதும் !
காங்கிரஸ் வீட்டிற்க்குச் செல்ல நேரிடும் என்பது திண்ணம். இதனால் சோணியா காந்தி பெரும் குழப்பமடைந்துள்ளார். அதாவது இந்திய அரசாங்கத்தின் குடுமி தற்போது மேற்குறிப்பிட்டுள்ள அந்த 2 கட்சிகளின் கைகளில் தான் உள்ளது. இதனை வைத்தே இக் கசிகள் ஆடாத ஆட்டம் போடுவார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். இன் நிலையை சமாளிக்க நேற்று இரவு காங்கிரஸ் உயர்மட்ட உறுப்பினர்கள், கூடி ஆலோசித்துள்ளார்கள். கலைஞரை திருப்திப்படுத்த உடனடியாக அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான சில அம்சங்களைச் சேர்க்க தாம் ஒத்துக்கொள்வதாக அறிவிப்பது என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இம் முடிவு காலதாமதமாக எடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தோடு அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவரும் கால எல்லை முடிவடைந்துள்ளது. இன் நிலையில், என்ன செய்வது என்பது தொடர்பாக காங்கிரஸ் அரசு மண்டையை பிய்த்துக்கொண்டு இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த இந்தியா தற்போது இதனை மீண்டும் வலுவாக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது.
தகுந்த சமயத்தில் கலைஞருக்கு உரிய விடையங்களை எடுத்துச் சொன்ன வழக்கறிஞர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள், தாம் தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர்களின் அபிலாஷைகளை கேட்டறிந்து கலைஞரிடம் எடுத்துச் செல்வேன் என்று அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்தார். திமுக முன்னர் விட்ட சில பிழைகளை இனியும் விடாது என்று அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4728
Geen opmerkingen:
Een reactie posten