2011ம் ஆண்டு எகிப்த்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேஃஸ் புக் ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் பேஃஸ் புக் ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடையம். அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். டமில் ரைசிங்.காம்( தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும். எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4727
Geen opmerkingen:
Een reactie posten