ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
இந்தத் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் டொமி வெய்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு விரிவான அளவில் உலக நாடுகள் ஆதரவளித்து வந்தமை வரவேற்கப்பட வேண்டியது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொறுப்பு கூறல் போன்றவற்றை உறுதிப்படுத்த சரியான பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையின் முக்கியமான முயற்சிகளுக்கு பங்குதாரராக விரும்புகின்றோம்.
நாட்டில் நல்லிணக்கம், சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டு தீர்மானம் வழியமைக்கும் என ஜனாதிபதி ஒபாமா நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் டொமி வெய்டர் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRWNZmu1.html
இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது!- அமெரிக்கா, கனடா
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 11:49.03 AM GMT ]
இலங்கையில் ஸ்திரத்தன்மையும் சமாதானத்தையும் ஏற்படுத்த உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றமை இந்தத் தீர்மானத்தின் ஊடாக புலனாகியுள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதில் உலக நாடுகள் காட்டி வரும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க தேசிய பாதூப்புப் பேரவையின் பேச்சாளர் கெட்லீன் ஹேய்டன் தெரிவித்துள்ளார்.
அர்த்தமுள்ள வகையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நம்பகமான முறையில் விசாரணை செய்ய வேண்மேன தீர்மானம் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை மீது அழுத்தம் பிரயோகித்தல் உள்ளிட்ட அண்மைய நிகழ்வுகள் முதல் மனித உரிமை விவகாரம் வரையில் சகல விடயங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமை ஊடாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட ஏனைய வழிகளிலும் இதனை தொடர்ந்தும் வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten