தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் முற்றிலும் தவறானது என்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க


ஐ.நா மனித உரிமைகள் போரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானவை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சமவுரிமைகளை அனுபவிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் என்றார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான அமெரிக்காத் தீர்மானம் 12 மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 25 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் 8 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten