எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கக் கூடிய புரிந்துணர்வு அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
நாட்டுக்கு வெளியே உள்ளோரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஆட்சி நடாத்த அரசாங்கம் தயாரில்லை.
உள்நாட்டு அரசியல் அழுத்தங்களின் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் சில தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.
எவ்வாறெனினும் சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாகவே இருக்கின்றது என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten