தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 maart 2013

அமெரிக்க பிரேரணையை த.தே.ம.மு நிராகரிப்பு


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த பிரேரணை பக்கச்சார்பானதாக இருக்கின்றது. இதில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவொரு கண்துடைப்பாகும்.
ஆகையினால் இந்த தீர்மானத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதுடன் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் உரிமை மீறல்களை தொடர்பில் வெளியுலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்பபோவதாகவும் அவர் அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பிரேரணையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 13 ஆவது திருத்ததோடு தமிழ் மக்களின் பிரச்சனையை முடக்கி தமிழ் தேசியத்தினை இல்லாதொழிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்ற செய்தியை நாங்கள் பல முறை தெளிவு படுத்தியிருந்தோம். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிலமை மோசமடைந்துள்ளது.
குறிப்பாக காணி அபகரிப்பு, பல்கலைக்கழக மாணவர்களுககு எதிராக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டமை, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டமை போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.
தமிழ் தேசத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் செய்துவருகின்றது. அரசின் இவ்வாறான இன அழிப்புச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது முதல்வேiயாக இருக்கின்றது. போராட்டங்கள் நடத்துவதன் இதனை வெற்றிகொண்டு முன்னேற்றத்தனை அடைய முடியும்.
இன அழிப்புச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முதல்வேiயாக இருக்கின்றது. தமிழ் தேசத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் செய்துவருகின்றது. வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இடைக்கால நிர்வாக அலகு உருவாக்கப்பட்டு அதன் மூலம் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறும் போதே சுயமாக மக்கள் சாட்சியம் அளிக்க கூடிய தன்மை ஏற்படும்.
இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஏமாற்றம் மட்டுமல்ல. தமிழ் தேசிய நலன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனால் அதனை நிராகரிப்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது என்றார்.
10(1317)

http://www.jvpnews.com/srilanka/19312.html

Geen opmerkingen:

Een reactie posten