தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 maart 2013

தமிழீழம் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!


தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை.. இலங்கை அரசின் படுகொலைகளை போர்க் குற்றமாக பிரகடனப்படுத்த வேண்டும்… தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்தக் கோரியும் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை புழல் காவாங்கரையிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten