தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 september 2011

வன்னியில் இடம்பெற்ற போர்! 21 ம் நூற்றாண்டின் படுகொலைகள் நிறைந்த இரகசியப்போர்!- சிட்னி தெ மோனிங் ஹெரல்ட்

[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 10:21.04 AM GMT ]
இலங்கையின் வன்னியில் இலங்கைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதிப்போர், 21 ஆம் நூற்றாண்டின் படுகொலை நிறைந்த இரகசிய போராகும். இந்த கருத்தை சிட்னி தே மோனிங் ஹெரல்ட் செய்திதாளில் Antony Loewenstein  என்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளால் கேடயங்களாக வைக்கப்பட்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்தநிலையில் செய்தியாளர்கள்,மற்றும் மனிதாபிமான பணியாளர்கள்; மற்றும் சுதந்திரமான பார்வையாளர்கள் எவரும் பிரவேசிக்காத நிலையில் 21 ஆம் நூற்றாண்டின் பாரிய இரகசிய படுகொலை போராக வன்னிப்போரை செய்தியாளர் Antony Loewenstein  குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது. எனினும் சீனாவின் ஆதரவைக்கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இதன் மூலம் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கிறது.
ஆனால் மிகவும் மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையை ஏனைய நாடுகளுக்கு பாடங்களாக காட்டமுடியாது என்று சிட்னி மோனிங் ஹெரல்ட் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் சபையின் முன்னாள் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ், அண்மையில் கூறிய கருத்தில் இலங்கையில் தமிழர்கள் மொழி உரிமை ஒடுக்கப்பட்டு நிலம் பறிக்கப்பட்டமை காரணமாகவே, தனித்தமிழீழத்தை கோரிவருவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை வன்னியில் கோரமான போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் அதனை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தவறியிருந்தமை குறித்து விக்கிலீக்ஸ_ம் தகவலை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் இலங்கையில் இனவேற்றுமை பாரியளவில் அதிகரித்து வருகிறது.
அத்துடன் அடக்குமுறை ஆட்சியும் அங்கு வேகமாக நடந்தேறி வருகிறது என்று கோடன் வைஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவுஸ்திரேலிய உட்பட்ட மேற்குலக நாடுகள் வெட்கக்கேடான நிலையில் இந்த செயல்களை கண்டுகொள்ளவில்லை என்று கோர்டன் வைஸ் விமர்சனம் செய்துள்ளமையை சிட்னி மோனிங் ஹெரல்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten