தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 september 2011

இதில் எது உண்மை,சரியான தகவலை தருவதே நடுநிலை செய்தி!!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கை ஒத்தி வைப்பு?
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 02:43.16 AM GMT ]
 
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 07:37.43 AM GMT ]
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்பளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிப் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டனில் உள்ள தமிழர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம் உள்ளதால் பிரித்தானிய அரசாங்கம் இத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய மருத்துவ அறக்கட்டளையகம் இன்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட 50 பேரை வாடகை விமானம் மூலம் பிரித்தானிய எல்லை முகவரகம் பலவந்தமாக திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டமைக்கு மருத்துவ சான்றுகள் உள்ளன என அறக்கட்டளையகம் குறிப்பிட்டது.
இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மோசமாக நடத்தப்படும் ஆபத்து உள்ளது என பல தொண்டர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கைக்கு மீண்ட போது சித்தரவதைக்கு உட்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கை ஒத்தி வைப்பு?
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 02:43.16 AM GMT ]
இலங்கை அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 50 இலங்கை அகதிகள் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருந்தனர்.  எனினும், இறுதி நேரத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் சிலர் துஸ்பிரயோகம் செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகதிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அகதிகள் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார்கள் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா அல்லது நிரந்தரமாக அவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten