தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 september 2011

பொங்குதமிழ் நிகழ்விற்கு அனைத்து நாடுகளிலுமிருந்தும் கலந்து கொண்ட தமிழீழத் தேசபக்த மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது நன்றி

[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 08:43.36 PM GMT ]
கடந்த 19.09.2011 திங்கள் 14.00 மணியளவில் சுவிஸ் நாட்டில் ஐ.நா முன்பாக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு இலட்சிய உறுதியுடன் பொங்கு தமிழராய் அனைத்து நாடுகளிலுமிருந்தும் கலந்து கொண்ட தமிழீழத் தேசபக்த மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இப்பொங்குதமிழ் நிகழ்விற்கு ஊடகத் தர்மத்தின் வழி நின்று தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து ஊடகங்களின் கரங்களையும் இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியுணர்வோடு இறுகப் பற்றிக் கொள்கின்றோம். மேலும் எவ்வித வேறுபாடுகளுமின்றி பொங்குதமிழ் நிகழ்விற்கு வாழ்த்துக்களையும் தமது முழு ஆதரவினையும் வழங்கிய அனைத்துத் தமிழர் நலன் பேணும் அமைப்புக்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
அதேபோன்று இந்நிகழ்விற்குத் தாயகமாம் தமிழீழத்திலிருந்தும் தாய்த்தமிழ்நாட்டிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் வாழ்த்துக்களை வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
மேலும் ஈழத்தமிழரின் வலியுணர்ந்து அவர்களுக்காக பொங்குதமிழ் நிகழ்வில் குரல் கொடுக்க வருகை தந்த அனைத்து நாட்டுப் பிரமுகர்களையும் உலகத் தமிழினம் சார்பாக நெஞ்சில் நிறுத்தி நன்றி நவில்கின்றோம்.
இந்நிகழ்வின் முக்கிய சிறப்பு வெளியீடான "வெல்வது உறுதி" எனும் இறுவெட்டினைத் தயாரிக்க உதவிய பாடலாசிரியர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் நெறிப்படுத்துனர்கள் யாவருக்கும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இப்பொங்குதமிழ் நிகழ்வில் மக்கள் கலந்து கொள்வதற்குச் சீரிய முறையில் ஒழுங்குகளைச் செய்திருந்த அனைத்து நாட்டுத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்களையும் இந்நிகழ்விற்கான பல்வேறு பணிகளையும் பொறுப்பெடுத்துச் செயற்படுத்திய அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றோம்.
இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போன்று இப்பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நிதிப்பலத்தினை வழங்கிய பெருமக்கள் யாவரையும் அனைத்து நாட்டுத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது வாழ்த்துக்களையும் நன்றியறிதலையும் தெரிவிப்பதில் மனநிறைவடைகின்றோம்.
மேலும் தொடர்ந்தும் எமது இனத்தின் விடியலுக்காகப் பலம் சேர்க்கும் உறவுகள் அனைவருடனும் இணைந்து "வெல்வது உறுதி" என மாவீர்களின் சாட்சியாக சத்தியம் செய்கின்றோம்.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'
பொங்குதமிழ் நிகழ்வில் சுவிஸ் நாட்டிலிருந்து தாயகத்திற்காகப் பெறப்பட்ட கடனை மீளளிப்பதற்காக நடாத்தப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு.
தாயகத்திற்காக சுவிஸ் நாட்டில் பெறப்பட்ட கடனை மீளளிக்கும் முகமாக ஐரோப்பிய நாடுகள் தழுவிய ரீதியில் முதன்முறையாக நடாத்தப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு பொங்குதமிழ் நிகழ்வில் அதிஸ்டம் பார்க்கப்பட்டது.
பரிசு பெறும் அதிஸ்டசாலிகள் விபரம் பின்வருமாறு:
1வது பரிசு - இலக்கம் 9328 - சுவிஸ் (பேர்ண்)
2வது பரிசு - இலக்கம் 4843 - பிரான்ஸ் (பரிஸ்)
3வது பரிசு - இலக்கம் 2698 – பிரித்தானியா
ஆறுதல் பரிசுகள் பெறுவோர் விபரம்:
1. இலக்கம் 9110 - சுவிஸ் (சு10ரிச்)
2. இலக்கம் 8182 - Nஐர்மனி (பேர்லின்)
3. இலக்கம் 5041 - விபரம் விளங்கவில்லை
4. இலக்கம் 8231 - ஹொலன்ட்
5. இலக்கம் 3523 – நோர்வே
எமது தேவையறிந்து இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது மனம்நிறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் சுழற்சியாகத் தொடர்ந்தும் இத்திட்டம் செயற்படுத்தப்படவிருப்பதால் உங்களை நாடி வரும் இந்நல்வாய்ப்புச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதன் மூலம் இப்பாரிய கடன் சுமையைக் குறைப்பதற்கு பங்களிப்புச் செய்வீர்கள் என உறுதியாய் நம்புகின்றோம்..

Geen opmerkingen:

Een reactie posten