தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 september 2011

இலங்கைத் தமிழருக்கு எதிராக செயற்பட்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன்!- விக்கிலீக்ஸ்

[ செவ்வாய்க்கிழமை, 06 செப்ரெம்பர் 2011, 05:48.54 AM GMT ]
இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தமைக்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய எம்.கே.நாராயணனே காரணம் என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கியமான ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் இலங்கை விவகாரம் தொடர்பில் சிங்கள மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்குமாறு மன்மோகன் சிங்குக்கு ஆலோசனை வழங்கியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் கொள்கை தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியே இந்தியா இவ் முடிவை எடுக்க காரணமாக நாராயணன் இருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவை கிருஸ்ணமேனன் தவறாக வழிநடத்தியது போன்றே தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை நாராயணன் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விருவரும் இந்தியாவின் வெளிவிவகாரத்துறையை தவறாக வழிநடத்தியதாகவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் திமோதி ஜே ரோமர் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பிலேயே நாராயணன் குறித்த இக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten