தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 september 2011

நெதர்லாந்தில் தமிழர்களின் வழக்கு விசாரணை! நீதிமன்றில் இலங்கையின் கொலைக்களம் திரையிடப்பட்டது

Video

 
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 05:56.31 AM GMT ]
கடந்த 16 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட 5 தமிழ் மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் வழக்கு விசாரணை கடந்த 15ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
டென்காக் நகரில் நடந்துகொண்டிருக்கும் இவ் வழக்கின் 2ம் நாள் அமர்வில் ஐரோப்பிய நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையில் சிறுவர் படை சேர்ப்பு கரும்புலிகள் தாக்குதல் சர்வதேச ரீதியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்களா? இல்லையக? என்ற விடயங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.
இந்த அமர்வில் ஐரோப்பிய நீதிமன்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி வழககுத் தாக்கல் செய்திருக்கும் பிரபல வழக்கறிஞர் திரு. விக்ரர் கொப்பே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீதிபதியின் அனுமதியுடன் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக்களம் ஆவணக்காட்சி திரையிடப்பட்டது.
இக்காட்சியினை அங்கு வருகை தந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இக்காட்சியினைப் பார்த்து அதிர்ந்து போன பல வழக்கறிஞர்கள் இவ் வழக்கினை இன்று மேற்கொண்டு நடத்த வேண்டாம் என்றும் இவ்வழக்கினை அடுத்த வாரம் நடத்த வேண்டும் என்றும் இது எம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கூறினர்.
இதைக்கேட்ட நீதிபதியவர்கள் இன்று ஒத்திவைக்க முடியாது எனவும் ஆனால் போதிய அளவு இடைவேளை விடுவதாகவும் கூறி, உடனடியாகவே இடைவேளையை அறிவித்தார்.
அதன் பின்னர் போதிய அளவு இடைவேளை பெற்று மீண்டும் வழக்கு தொடர்ந்து இடம் பெற்றன.
ஆயினும் வழமையான நேரத்திற்கு முன்பாகவே நீதிபதி அவர்களால் இன்றைய அமர்வு முடிவிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten