தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 september 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும: பிரித்தானியத் தூதுவர்


[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 04:37.31 PM GMT ]
புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் செயற்பாடுகள் குறித்து பிரித்தானிய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
'உயர்ஸ்தானிகரிடம் கேளுங்கள்' என்ற வீடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 2001ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுதல் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten