இலங்கையின் அமைவிடம் குறித்து சரியாக தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கின்றார்.
இவ்ர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களில் ஒருவர்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் கடந்த காலங்களில் முக்கியமான அமைச்சுப் பதவிகளையும் வகித்து இருந்தவர்,கவிஞரும்கூட.
ஆம். இவர் சாட்சாட் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பிதான்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் கலந்து கொண்டு இவர் உரையாற்றி இருந்தார்.
இலங்கை தென்மேற்கு ஆசியாவில் அமைந்து உள்ளது என பேச்சின் இடையில் சொன்னார்.
அஸ்வர் பேசி முடித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹர்ஷா டி சில்வா எழுந்து பேசினார்.
புவியியல் பாடத்தை அஸ்வர் எம்.பி சரியாக படித்து இருக்கவில்லை, ஏனெனில் இலங்கை தென்மேற்கு ஆசியாவில் அமைந்து இருக்கவில்லை, தெற்கு ஆசியாவில் அமைந்து உள்ளது, தரம் 02 இல் பயில்கின்ற மாணவர்களுக்குகூட இது தெரியும் என்றார்.
எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வரை கிண்டல் செய்து எக்காளமிட்டு சிரித்தனர். |
Geen opmerkingen:
Een reactie posten