தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 september 2011

விக்கிலீக்ஸ் தகவல் தொடர்பில் அமெரிக்கா தூதுவர் விளக்கம் அளிக்க வேண்டும் : அங்கிலிக்கன் பேராயர்

[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 01:07.57 AM GMT ]
இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் விக்கிலீக்ஸில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
இந்தநிலையில் அந்த தகவல்கள்; தொடர்பில் அமெரிக்கா தூதுவர் தமது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அங்கிலிக்கன் பேராயர் துலிப் டி சிக்கேரா வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி பேராயர் டுலிப் சிக்கோராவின் கருத்தை அமெரிக்கா தூதுவர் பெற்றிசீயா பியூட்டினியஸ், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளார்.
அதில் டுலிப் சிக்கேரா, உலக நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக தமது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து வெளிப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலணித்துவ நாடாக இருந்த இலங்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
தென்னாபிரிக்காவின் பிரச்சினை, அமெரிக்காவின் மனித உரிமைகள் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஆதிவாசிகளின் உரிமைகள் போன்ற விடயங்களை இதற்கு உதாரணங்களாக கொள்ளலாம் என்று சிக்கேரா குறிப்பிட்டுள்ளார்.
சரியோ பிழையோ மஹிந்த ராஜபக்ச சிங்களவர்களின் விருப்பின் பேரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவர் வடக்கை பற்றியும் கருத்திற் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் சிங்களவர்களின் பார்வையில் முன்னேற்றம் உள்ளதாகவும் சிக்கேரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா மேம்படுத்தல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் சிக்கேரா வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten