தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 september 2011

ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தில் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவதால் எமக்கென்ன பயன் ??

(வீடியோ இணைப்பு)


சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மட்டக்களப்பிலும் மவுசு குறையவில்லை,

தம் தலைவர் படங்களுக்கு பாலபிஷேகம் செய்வது ஊர் உலகத்தில் நடக்கும் சாதாரண விடயம் குறிப்பாக தமிழ்நாட்டில், அதே வழக்கம் இங்கேயும் பரவத்தொடங்கியிருக்கிறது. எவ்வளவோ பேர் ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தல் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு முட்டாள்தனம்.

இது அஜித் படத்திற்கு மட்டுமல்ல ரஜினி , விஜய் போன்றவர்களுக்கும் அடிக்கடி நடக்கும். இதன் மூலம் நடிகர்களை குறைகூற முடியாது. அவர்கள் யாரும் தங்களுக்கு பாலூத்துமாறு பரிந்துரைப்பதில்லை.

இதுபோன்ற செயற்பாடுகள் படத்திற்கு வசூலை அள்ள உதவும். அதுவும் எங்கோ இருக்கும் நடிகருக்கும் சில பல புள்ளிகளுக்கும் , எமக்கென்ன பயன் ?

கலைஞர்களை வாழ்த்துவது சிறப்பு அதுவும் அளவோடு இருந்தால் அதனிலும் சிறப்பு.














03 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten