தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2011

போரின் போது கிறிஸ்தவ தலைமை அமைதியாக இருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 02:34.31 AM GMT ]
2009 ஆம் ஆண்டு வன்னியில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்திய வேளையில் இலங்கையின் கிறிஸ்தவ தேவாலய தலைமை அமைதியாக இருந்தமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து வெளியிடப்பட்ட கடிதம் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் செய்தியாக மாறியுள்ளது.
குறித்த நேரத்தில் கத்தோலிக்க மதகுருவான பிரான்ஸிஸ் ஜோசப், அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் 365 ஆயிரம் மக்களுடன் தஙகியிருந்தார்.
இதன்போது இலங்கை இராணுவத்தினர், மோட்டார் மற்றும் எறிகனை தாக்குதல்களை பாதுகாப்பு வலயங்களின் மீது நடத்தினர்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி வணக்கத்துக்குரிய தந்தை பிரான்ஸிஸ் ஜோசப், வத்திகானுக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாப்பரசருக்கு எழுதிய அந்தக்கடிதத்தில், கடந்த இரவில் மாத்திரம் தாம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீதே இலங்கை படையினர் நடத்திய தாக்குதலில் 3318 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 4000 பேர் காயமடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தலைமை இந்த விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது வணக்கத்துக்குரிய தந்தை பிரான்ஸிஸின் கருத்தாக இருந்தது.
இந்தநிலையில் குறித்த கடிதமே தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் காணாமல் போனமைக்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போர் முடிவடைந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னர் வணக்கத்துக்குரிய தந்தை, பிரான்ஸிஸிம் பொதுமக்களுடன் ஓமந்தை சோதனை சாவடியின் ஊடாக வவுனியாவுக்கு வந்த போது விசேட விசாரணைக்காக இலங்கைப்படையினரால் அழைத்து செல்லப்பட்டார்.
எனினும் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என்று திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த வணக்கத்துக்குரிய தந்தை காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் சுவாம்பிள்ளை கேட்டிருந்தார்.
இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று காடினால் மல்கம் ரஞ்சித், அமெரிக்க தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸிடம் கேட்டுக்கொண்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை அடுத்;தே தந்தை பிரான்ஸிஸின் கடிதம் தொடர்பான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் காணாமல் போனதாக கூறப்படும் குறித்த மதகுருவின் கடிதம் உரிய வேளையில் வத்திக்கானுக்கு அனுப்பபட்டதா என்பதும் கேள்விக்குறிய விடயமாகியுள்ளது.
இதேவேளை போர் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததன் பின்னரே, பாப்பரசர் 16 வது பெனடிக்ட், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு மோதலில் ஈடுபட்டுள்ளோர் இடம்தர வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இவ்வாறான கோரிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையிலேயே பாப்பரசரும் இந்தக்கோரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten