[ வியாழக்கிழமை, 15 செப்ரெம்பர் 2011, 02:07.04 PM GMT ]
பாதுகாப்பு எதுவும் இல்லாத சூழ்நிலையில் இன்றும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மனோ கணேசன் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளார் என நாட்டில் தமிழரின் பாதுகாப்பின்மையை ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மனோ கணேசன் குரல் கொடுத்து வந்தார்.
இன்று பாதுகாப்பு எதுவுமின்றி தமிழ் மக்களின் உரிமைக்காக தனித்து நின்று குரல் கொடுத்து வருகின்றார். உண்மையில் மனோ ஒரு துணிச்சலான அரசியல்வாதியாக திகழ்கின்றார் என மனோ கணேசனுக்கு சேனரத்ன புகழாரம் சூட்டியுள்ளார்.
இதன் மூலம் நாட்டில் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பவர்களுக்கோ பாதுகாப்பு இல்லை என்பதனையும் அதையும் மீறி குரல் கொடுப்பவர்கள் மிவும் துணிச்சல் வாய்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற தற்கால சூழலையும் உறுதிப்படுத்துவதாக சிறிலங்க அமைச்சரான ராஜித சேனரத்னவின் கூற்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten