தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 september 2011

மகிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை � அவசரமாக நாடு திரும்புவார்?

அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கேணல் ரமேசின் மனைவி நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘தேவி எதிர் ராஜபக்ச‘ வழக்கிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈஐஎன் செய்தி கூறுகிறது.

இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் நாள் தாக்கல் செய்திருந்தார்.

கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten