தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 september 2011

சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி ஜெனிவாவில் போராட்டம் - ஏஎவ்பி


(வீடியோ இணைப்பு)
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நேற்று தமிழர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிட வேண்டும் என்று கோரி சுமார் 1000 வரையிலான தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் போராட்டம் நடத்தியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்ததாக ஏஎவ்பி தகவல் வெளியிட்டுள்ளது.


போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்க லண்டனில் இருந்த சென்றிருந்த கந்தையா ராஜமனோகரன் என்பவர் ஏஎவ்பியிடம் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சுமார் 5,000 தொடக்கம் 10,000 பேர் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான தமிழர் தாயகத்தையே தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா தனது கையில் எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வடக்கு சுவிற்சர்லாந்தில் உயர்நிலை பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் ஈழத்தமிழரான நிவேதன் நந்தகுமார், போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அனைத்துலக சமூகம் எதையும் செய்யவில்லை என்று விசனம் வெளியிட்டுள்ளார்.

தமிழர்களான நாம் விடமாட்டோம், சுதந்திரத்துக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம் என்றும் அவர் கூறியதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.




20 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten