தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 september 2011

தமிழ் இளையோரே போலித் தலைமைகள் நம்பி வன்முறைக்குள் வீழாதீர் – அமெரிக்கச் சிறையிலிருந்து கனடாவை நோக்கி ஒரு அபயக்குரல்


Photo
[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 05:18.06 AM GMT ]
தயவு செய்து வன்முறையைப் பின்பற்றும் சூழ்ச்சிக்குள் தள்ளும் போலித் தலைமைகளை நம்பாதீர்கள் என கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின் முன்னைநாள் தலைவரும்..
...25 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வருபவருமான சதாஜன் சராச்சந்திரன் கனடிய தமிழ் இளையவர்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளதாக நஷனல் போஸ்ற் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூகசேவைக்காக தன்னை அர்ப்பணித்த இந்த இளைஞன் அமெரிக்காவில் ஆயுதம் வாங்குவது போன்ற ஒரு சதிவலைப் பொறிக்குள் அகப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.
பிணையில்லாத 25 வருடத் தண்டனையில் 5வருடங்களைக் கழித்த நிலையில் சிறைச்சாலையில் இருந்து அவர் கனடா வாழ் தமிழ் இளைஞர்களிற்கு எழுதிய கடிதத்தை நஷனல் போஸ்ற் என்ற பத்திரிகை முக்கியப்படுத்தி வெளியிட்டுள்ளது.
கனடியத் தமிழ் இளைஞர் அமைப்பிற்கு தலைவராக இருந்த 31 வயதான ஒரு கணணிப் பொறியியலாளரான இந்த இளைஞர் தனது வீழ்ச்சிக்கு தங்களை கனடாவில் வழிநடத்திய தலைமையை குற்றஞ்சாட்டியதோடு. தாங்கள் விட்ட இந்தத் தவறை மற்றயை இளைஞர்களும் விடக்கூடாது என்று மன்றாட்டமாகக் கேட்டுள்ளார்.
தமிழ் இளையோர் அமைப்புப் புலிகளது கட்டமைப்புக்களில் ஒன்றே என்பதை தனது கடிதம் மூலமாக உறுதிப்படுத்தியுள்ள மேற்படி இளைஞர் அதன் ரொறன்ரோப் பிரிவுக்குத் தான் தலைவராக இருந்ததை ஒத்துக் கொண்டதோடு புலிகள் களத்தில் இல்லை என்ற யதார்த்தத்தை ஏற்று யாருமே இனி வன்முறையைத் தூண்டும் இந்தத் தலைமைகளின் விருப்புக்குப் பலியாகக் கூடாது எனச் சாடியுள்ளார்.
ரொறன்ரோ வாழ் இளைஞர்களைக் குறி வைத்தே எழுதப்பட்ட இந்த இரண்டு பக்கக் கடிதம் தங்களை வழி நடத்தியவர்கள் தங்களை வெறுப்புகள், கோபங்கள், வன்முறைகளின் பக்கம் திசை திருப்பிப் தங்களைப் பலியாக்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதோடு, தங்களைச் சந்திக்கவரும் குடும்பத்தாரையும் அமெரிக்கா வராமல் தடுக்கும் சட்டங்களை தங்களை துன்பத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனது பெற்றோர்களை நான் கடந்த மூன்று வருடங்களாகப் பார்க்க சிறைச்சாலை அனுமதிக்கவில்லை. எனது குடும்ப உறவினர்கள் யாரையும் என்னைச் சந்திக்க கடந்த மூன்று வருடங்களாக அனுமதிக்கவில்லை. ஏன் என்னை கடந்த மூன்று வருடங்களாக யாருமே சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள மேற்படி இளைய சமூக சேவைத் தொண்டர், நான் தேர்ந்தெடுத்த பாதையே எனது தலைவிதியை மாற்றியது. எனது கடந்த காலத்திற்காக நான் மனம் வருந்துகிறேன்.
ஒரு கூட்டத்திற்கு அடுத்ததாக இன்னொரு கூட்டம் என வைத்து எங்கள் மீது இனவெறுப்பு உணர்வு ஏற்றப்பட்டது என அவர் தனது தலைமையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
துன்பம் தன்னை வாட்டி வதைப்பதாகவும் அது தன்னைச் சார்ந்தவர்களையும் சூழ்ந்துள்ளதாகவும் அப் பத்திரிகையில் இணைப்பாக பிரசுரிக்கப்பட்டுள்ள அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்களிற்கு என்ன தீர்வு வேண்டுமென்பதில் தன்னை ரொறன்ரோவில் வழிநடத்தியவர்கள் சிரத்தை கொண்டிருந்ததாகத் தனக்குத் தெரியவில்லையென்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆக தேசியத் தலைவரின் “தலையிடி தந்தவனிற்கே தலையிடியைத் திருப்பிக் கொடு” என்ற சிந்தனையாக்கம் இப்போது ரொறன்றோவை நோக்கி நியூயோர்க்கிலிருந்து திரும்பியிருக்கிறது.
நஷனல் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி:  http://news.nationalpost.com/2011/09/29/drop-tigers-jailed-arms-broker-urges/
சராச்சந்திரன் விடுத்த வேண்டுகோள் கடிதம்:  http://www.mercyfortamilprisoners.com/SathaLetter.pdf

Geen opmerkingen:

Een reactie posten