தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 september 2011

நாவாந்துறை இராணுவ அட்டூழியத்தை யாழ்.படைத் தளபதி ஏற்றுக் கொள்கிறார்!- சுமந்திரன் எம்.பி.



[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 06:33.46 AM GMT ]
நாவாந்துறையில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்களை ஏற்றுக் கொண்ட யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இனிமேல் இப்படியான துர்ச்சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்கமாட்டேன் என்று உறுதி கூறுகின்றார் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித நீக்கிலஸ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது, தெரிவித்ததாவது:
நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் முற்று முழுதாக தனிமனித மீறல் என்பதை மனிதாபிமானம் உள்ள எவரும் மறுக்கமுடியாது.
நாவாந்துறை சம்பவத்தையும் இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் இன்று ஜெனிவா மாநாட்டிலும் எதிரொலிக்கச் செய்துள்ளோம்.
இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர், தமிழர்களுக்கு ஏதும் பிரச்சினைகளே இல்லை, அரசு தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறது என்ற தொனியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா மாநாட்டில் வாய் கூசாமல் பொய் கூறி உள்ளார்.
அந்த மாநாட்டில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் வக்காலத்து வாங்கும் வகையிலேயே அவர் பேசியுள்ளார். வாய் கூசாமல் இவர்கள் பொய் கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயலும் போது நாம் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது.
இதனால் நாவாந்துறையில் இராணுவம் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயல்கள் உட்பட இங்கு அன்றாடம் இடம்பெறும் இராணுவ அடாவடித்தனங்களையும், அவற்றுக்கு அரசின் அனுசரணையையும் படம் பிடித்துக் காட்டுவது போல் அறிக்கை ஒன்றை ஜெனிவாவில் வெளியிட்டோம். இது அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பொய்ப் பிரசாரத்தை தவிடு பொடியாக்கி விட்டது.
சுழிபுரத்தில் இராணுவத்தினர் இருவருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களை ஓரிடத்தில் திரட்டித் தாக்குவதற்குத் இராணுவத்தினர் தயாரானார்கள்.
இதனை அந்தப் பிரதேச மக்கள் எனக்குத் தொலைபேசி மூலம் அறிவித்தனர். உடனடியாக வடபிராந்திய கட்டளைத் தளபதி ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.
நாவாந்துறையில் இடம்பெற்ற துர்சம்பவங்கள் இனிமேல் எங்கும் நடக்க விடமாட்டேன். நாவாந்துறையில் தப்பு நடந்துவிட்டது என்று கூறினார். அத்துடன் சுழிபுரம் பிரதேசத்தில் அப்படி நடக்காமல் பார்த்துக் கொண்டார்.
தடுமாற்றமான நிலையிலும் கூட நாவாந்துறையில் இராணுவத்தினர் தப்புச் செய்து விட்டனர் என்பதைத் தளபதியே ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். 

Geen opmerkingen:

Een reactie posten