தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 september 2011

மகிந்தரின் வாயால் வெளிவந்த ரகசியம் அம்பலம்!

(வீடியோ இணைப்பு)
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது.

"நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார்.

"இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்துக்குப் பதிலளிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட "ஏற்றக்கொள்ளப்பட்ட பொய்கள்" (Lies Agreed To) என்ற ஆவணப்படத்தையே இதன் மூலம் அவர் குறிப்பிடுகின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது.

'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஒளிநாடாவானது ஐ.நா. மற்றும் பான் கீ மூனின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றது.

அத்துடன் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரைச் சம்பந்தப்படுத்தியதாகவும் காணப்படுகின்றது. ஆனால், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஒளிநாடாவை பான் கீ மூன் இதுவரையில் பார்க்கவில்லை என அவரது பேச்சாளர் மார்ட்டின் சேர்க்கி கூறியிருக்கின்றார்.

இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு பல மாத காலத்தின் முன்னரே அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
26 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten