தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 september 2011

புலிகளின் நிதித்துறையில் பணியாற்றியவரை போர் குற்றவாளி என கனேடிய நீதிமன்றம் அறிவிப்பு

 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வரி மூலம் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவரை போர் குற்றவவாளி எனக்கூறியுள்ள கனேடிய பிராந்திய நீதிமன்றம் அவரை கனடாவிலிருந்து நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

பூவசரச் துறைராஜா என்று அழைக்கப்படும் 36 வயதுடைய இலங்கையர் கனடாவிற்குச் செல்லும் முன்னர் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டவர் என கனடாவில் உள்ள பிராந்திய நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.

பாடசாலையில் கல்வி கற்று முடிந்ததும் தனது சகோதரனுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தான் பணிபுரிந்து வந்ததகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் தொழிற்சாலைக்கு வரிப்பணம் பெற வந்து செல்வார்கள் என்றும் தன்னை அவர்கள் பக்கம் சேர்க்க முயற்சித்த போது தான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாவும் பூவரசன் துறைராஜா கனேடிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தன்னை பலவந்தமாக முகாமிற்கு அழைத்துச் சென்று தங்களுடன் இணைந்து செயற்படுமாறு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று வாரங்கள் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளுடன் இணைந்து செயற்பட இணங்கியதாக தெரிவித்த அவர், புலிகளின் தின்னவெளி முகாமில் சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரண்டு வருடங்களுக்கு புலிகளின் சங்கானை நிதி திணைக்களத்திற்கு தான் மாற்றப்பட்டதாக துறைராஜா குறிப்பிட்டுள்ளார்.

சிவில் யுத்தத்துக்காக புலிகளுக்கு அளிக்கப்படும் வரிப் பணங்களுக்கு தானே பொறுப்பாளியாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேலை செய்த நாட்களில் மாலை வேளையில் தான் வீட்டுக்குச் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டதாக துறைராஜா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றியவுடன் தான் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி 2000ம் ஆண்டு கொழும்பிற்குச் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் 6 நாட்களின் பின்னர் லஞ்சம் கொடுத்து விடுதலையானதாகவும் துறைராஜா தெரிவித்துள்ளார்.

பின்னர் பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற தனக்கு 2007ம் ஆண்டு அகதி அந்தஸ்த்து மறுக்கப்படவே போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி கனடாவிற்கு புகழிடம் கோரி வந்ததாக கனேடிய பிராந்திய நீதிமன்றில் அவர் சாட்சியளித்துள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்றம் அவரை போர் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து தன்னை பலவந்தப்படுத்திய ஒரு குழுவில் இருந்ததால் தனக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து துறைராஜா விவாதித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் நிதித்துறையில் பணிபுரிந்தாரே தவிர ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என துறைராஜா தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஐக்கிய நாடுகள் அகதிகள் விதிமுறைகளின் படி துறைராஜா போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவரை நாடு கடத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 30 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten