தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 september 2011

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் நீதி குறித்து நான் வெட்கப்படுகின்றேன்: ஹக்கீம்

[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 05:23.13 PM GMT ]
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் நீதி குறித்து தான் மிகவும் வெட்கப்படுவதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் இன்று நீதி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதனை எண்ணி நீதியமைச்சர் என்ற வகையில் நான் வெட்கமுறுகின்றேன்.
சட்டத்தையும், ஒழுங்கையும் ஒருசிலர் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு காட்டுத்தர்பார் ஒன்றை இந்நாட்டில் கட்டவிழ்த்து விட முற்படுகின்றார்கள். தங்கள் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தண்டிப்பதற்கும், ஏனையவர்களை அச்சுறுத்தி அடக்கியாளவும் முற்படுகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளையும், இலங்கையின் நீதித்துறையை மீறி நடக்கும் காட்டுத்தர்பார்களையும் விமர்சிப்பதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமையொன்று தேவையாக உள்ளது.
அரசாங்கத்தினுள் இருப்பதற்காக இவற்றைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி மௌனியாக ,ருக்க முடியாது. அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தான் வேண்டும்.
இல்லாவிட்டால் நீதியமைச்சர் எங்கு போய் விட்டார் என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பும் நிலையும் கூட உருவாகலாம் என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten