தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 september 2011

வெளியில் உறைப்பு உள்ளுக்குள் இனிப்பு!

அரசியல்வாதிகளில் யாரின் கதையை நம்புவது யாரை நம்பககூடாது என்று மக்கள் திண்டாடும் வகையிலேயே அநேகமான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.

உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரனும் அவரது பெறா மகனான கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான பிள்ளையானும் ஆளுக்கு ஆள் பிடித்து சாப்பிடுவது போல் மேடைகளில் முழங்குவார்கள்.

அது மட்டுமா ஒருவொருக்கொருவர் கொலை மிரட்டல் விட்டதாக ஊடகங்களுக்கும் செய்தி சொல்லுவார்கள். மக்களும் இவர்கள் சொந்தத்துக்கப்பால் அரசியலிலும் அவர்களது கொள்கையிலும் உறுதியாக உள்ளார்கள் என்று நம்பி விடுவார்கள்.

ஆனால் இவர்கள் வெளியில் ஒருவருக்கொருவர் உறைப்பாக காட்டிக் கொண்டு மேடைகளில் முழங்கினாலும் உள்ளுக்குள் இனிப்பாக பேசி அரசியல் செய்கின்றார்களோ என்று எண்ணும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

நேற்று மட்டக்களப்பு சித்தாண்டியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் பிள்ளையானும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அருகருகாக அமர்ந்து அன்பாக அளவளாவினார்கள்.

இதை இங்கு ஏன் சுட்டிக்காட்டப்படுகின்றதென்றால் இவர்கள் வெளியில் சும்மா மக்களை ஏமாற்றுவதற்காகவும் ஊடகங்களுக்காகவும் ஒருவொருக்கொருவர் விரோதிகளாக காட்டிக்கொள்கின்றார்கள்.

இவர்களின் வார்த்தைகளை நம்பி ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்கின்றார்கள் இதனால் ஏமாறுவது அப்பாவி பொது மக்களே.

அறிக்கை விடுவது போன்றும் மேடைகளில் ஆவேசப்படுவது போன்றும் மக்கள் நம்பிப்போட்ட வாக்குகளில் அரியாசனம் அமர்ந்த, இவ்வாறான ஒவ்வொரு அரசியல்வாதியும் சுயநல அரசியில் செய்யாமல் உண்மைக்குண்மையாக செயற்படுவதே மக்களுக்குச் செய்யும் முதல் கடமையாகும். இதுவே பலரின் கோரிக்கையுமாகும்.

எனவே இவ்வாறாக வெளிவேடத்துடன் செயற்படுபவர்கள் இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் உண்டு அவர்களையும் விரைவில் நாம் அறியலாம்.







15 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten