தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 september 2011

is it!!தமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் !

29 September, 2011
இலங்கை விமனாநிலையத்தில் தலையாட்டிகள் நிற்கின்றனர் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் பலமான கணணி வலையமைப்பு இருப்பதாகவும் சொல்லப்படுவதில் நூறு வீதம் உண்மை இல்லை என்பதனை தற்போது கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது கணணிகளில் சிலரது பெயர்களை இலங்கை அரசாங்கம் இட்டுவைத்திருந்தாலும் இலங்கை வரும் தமிழர்கள் குறித்து அவர்களுக்கு வேண்டாதவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் கைதுகள் நடைபெறுவதே உண்மை என அரசாங்கத் தரப்பிற்கு வேலைபார்க்கும் புல்லுருவி ஒருவர் பிற தமிழர் ஒருவருக்குத் தெரிவித்துள்ளார்.

அதாவது எமது புலம் பெயர் உறவுகள் இலங்கைக்கு விடுமுறைக்கு அல்லது உறவினர்களைப் பார்க்கச் செல்லும் வேளை அவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளிநாட்டில் வேலை செய்தார்கள் என்ற பெயரில் இரகசியப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆனால் இச் செய்திகள் வெளியே வருவது இல்லை. மாறாக இச் செய்தியை வெளியிட்டால் அரசாங்கம் அவர்களை நிரந்தரமாகவே சிறையில் அடைத்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு மட்டுமல்லாது இவ்வாறு பிடிபட்டவர்களை மீட்க 8000 முதல் 10,000 பவுன்ஸ் வரை கப்பம் கட்டப்படுகிறது. கொழும்பு செல்வோரில் மாதம் ஒன்றிற்கு சுமார் 8 தொடக்கம் 15 பேர் வரை இவ்வாறு கைதாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இது ஒரு வியாபாரமாக முளைவிட்டுள்ளது.

பல நாடுகளில் இதற்கு முகவர்கள் வேறு இருக்கிறார்கள். கொழும்பு சென்று ஒருவர் பிடிபட்டால் இவ்வளவு தொகை, ஏர்போட்டில் பிடிபட்டால் இவ்வளவு, 4ம் மாடியில் இருக்கிறாரா அதற்கு இவ்வளவு என ரேட் இருக்கு என்றால் பாருங்களேன். இந்த முகவர்களை அணுகி காசை வெளிநாட்டில் கட்டினால் பிடிபட்ட ஆள் திருப்பி வருவார். லண்டன், கனடா, ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே என இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவ்வாறு கிடைக்கும் பல கோடி ரூபாக்கள் இறுதியில் கோத்தபாயவுக்குச் சென்றடைகின்றன. ஆனால் இலங்கை விமனா நிலையத்தில் தம்மிடம் உள்ள அதி நவீன கணணிகள் மூலம் தாம் இலங்கைக்கு எதிராகச் செயல்படுவோரின் பட்டியலைத் தயாரித்து வைத்துள்ளதாக இலங்கை பிதற்றுவது உண்மை நிலையை மறைப்பதற்கே.

இதற்கு நல்ல உதாரணம் சமீபத்தில் இலங்கை சென்ற பெண் ஒருவர் இலங்கை அரசால் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு 4ம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் வருகை குறித்து ஏற்கனவே மொட்டைக் கடதாசி ஒன்று இலங்கைக்கு சென்று விட்டது. இதுபோல பல கடிதங்கள் தமக்கு வருவதாகவும் அதனை வைத்தே தாம் இலங்கைக்கு வரும் பல தமிழர்களை தாம் கைதுசெய்வதாகவும் ரகசியப் பொலிசார் கூறியுள்ளனர். குடும்பங்களுக்கு இடையே உள்ள குழப்பம், இல்லை ஒருவரை ஒருவருக்கு பிடிக்காமல் மனஸ்த்தாபம் கொண்டவர்கள் தற்போது பழிவாங்குவதற்கு இதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்க விடையமாகும். ஒருவரை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் இலங்கை செல்லவிருக்கும் முன்னர் இவ்வாறு மொட்டைக் கடதாசி ஒன்றை எழுதிப் போடுகிறார்கள். இதனை வைத்து இலங்கை இரகசியப் பொலிசார் இவர்களைக் கைதுசெய்கிறது.

இந் நிலையால் பல அப்பாவிகளும் ஒன்றும் அறியாதவர்களும் மாட்டித் தவித்து பெரும் பணத்தைச் செலவழித்து வெளியே வருகின்றனர். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க தன் கள்ளக் காதலியோடு சல்லாபமாக இருப்பதற்காக மனைவி இலங்கை செல்லும்போது கணவனே தன் மனைவியை மாட்டி விட்ட கதையும் தற்போது நடந்தேறியுள்ளது. முடிந்தவரை தன் மனைவியை இலங்கை சிறையில் அடைத்து வைத்திருக்கும்படி தன் சகாக்களுக்கு அவர் சொல்லிய விபரங்களும் அம்பலமாகியுள்ளது. என்ன உலகம் இது என்று கேட்கும் அளவுக்கு தமிழர்கள் நிலை இன்று சென்றுவிட்டது. எனவே எமது புலம் பெயர் உறவுகள் இனி இலங்கை செல்ல நேர்ந்தால் செல்வதை மற்றும் செல்லும் தேதிகளை முடிந்தவரை எவருக்கும் தெரியப்படுத்தாமல் விடுவது நல்லது. ஏன் எனில் உங்கள் உறவினர்களே உங்கள் எதிரியாகவும் இருக்கலாம் அல்லவா ?

Geen opmerkingen:

Een reactie posten