[ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர் 2011, 09:39.45 AM GMT ]
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரங்களை பகிர்வதில் பிழையில்லை என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் காணி அதிகாரங்களை வழங்கலாம். எனினும், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படாத நிலையில் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தற்போதைக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹிஸ்புல்லா, உரிய நேரத்தில் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களையும் இணைப்பது தொடர்பிலான தீர்மானத்தை கிழக்கு மக்களே எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்துத்துறை, பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten