தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2011

வடக்கு, கிழக்கில் இருந்து படையினரை வெளியேற்றுவது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தல்!- குணதாச

[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 06:49.42 AM GMT ]
தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. குறிப்பாக, வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. எனவே, சர்வதேசமோ தமிழ் அரசியல் கட்சிகளோ கூறுவது போன்று, இராணுவ முகாம்களை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, மீண்டும் பயங்கரவாதிகளுக்கு இடமளிப்பதற்காகவே தவிர வேறு ஒன்றும் கிடையாது என்றும் இவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,
புலிகளின் ஆயுதப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. இதனை ஒழிப்பதாயின் பரந்தளவிலான நடவடிக்கைகள் அவசியம்.
இன்று உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் புலிகளின் அரசியல் பயங்கரவாதம் தீவிரமடைந்துள்ளது. இதனை முற்றாக ஒழித்துக்கட்டினால் மாத்திரமே புலிப் பயங்கரவாதம் முற்றாக அழிந்ததாக கருதமுடியும். இன்று இலங்கை முன் உள்ள சவாலும் அதுதான்.
புலிகள் சர்வதேச அளவிலும் உள்நாட்டு அரசியலிலும் தமிழீழத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனை தோல்வியடையச் செய்யவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் படையினரை வெளியேற்றுவது என்பது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலான விடயமாகும்.
புலிகளின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோநாக்கில் உள்நாட்டில் உலாவும் தமிழ் அரசியல் கட்சிகளின் தேவையற்ற பிரசாரங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten