தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 september 2011

புலிகள் உறுப்பினர்களின் கைரேகைகள் அமெரிக்காவிடம் உள்ளதா ?

26 September, 2011
விடுதலைப் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்கள் மற்றும் நாட்டை விட்டு தப்பிச் சென்ற சிலரது கைரேகைகள் அமெரிக்காவிடம் உள்ளதா என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது. கனடா நாட்டிற்குள் பிரவேசிக்கும் பலரது கைரேகைகளை அமெரிக்கா தம்மிடம் உள்ள கைரேகை வங்கியில் ஒப்பிட்டுப்பார்த்து அவர்கள் விடுதலைப் புலிகளா இல்லையா என கனேடிய அரசுக்கு தெரிவித்து வருவதாக தற்போது அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் காணப்படுவதாக கனடா அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இரண்டு வருடங்களின் முன்பு ஓஷியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 76 இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் பரிசோதிக்கப்பட்ட போதே இந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. கைரேகை வங்கியில் உள்ள தகவல் கோர்ப்பில் ஆராய்ந்து பார்த்த போது இந்த இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கோஹன் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 2008ம் ஆண்டு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் அதன்போது இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு நாட்டை நம்பி தாம் போராளிகள் என்று கூறி அடைக்கலம் கேட்ட 2 நபர்களின் தனிப்பட்ட விபரங்களை அமெரிக்கா கனடாவுக்கு வழங்கியுள்ளமை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எவரும் ஆதரிக்க முடியாது. அதாவது இரகசியத் தகவல் ஒன்றைப் பெற்றுகொண்டு பின்னர் இத் தகவல்களை அது ஏனைய நட்பு நாடுகளுக்கு அதனைக் கொடுக்கிறது. இது தனி மனித சுதந்திரத்தையும் உரிமையை மீறும் செயலாகவும் அமைந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten