இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளராகக் கடமையாற்றி பின்னர் இலங்கையை விட்டு வெளியேறிய கோர்டன் வைஸ் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்து வருவது என்பது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அல்ஜசீரா பி.பி.சி மற்றும் சனல் 4 போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு அவர் இலங்கையில் நடைபெற்ற பல விடையங்களை தெரிவித்து ஒரு சாட்சியாகவே மாறியிருந்தார். அவர் தொடர்ந்தும் இலங்கையில் ஈழத் தமிழர் படும் இன்னல் தொடர்பாக குரல்கொடுத்துவந்தார். இலங்கையில் தாம் கண்டதையும் தனது அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். த கேஜ் என்று அழைக்கப்பட்டும் இப் புத்தகத்துக்கு கனடா மற்றும் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் முன்னுரிமை கொடுத்து இப் புத்தகம் பற்றி எழுதியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான சிட்னி மோனிங்கும், மற்றும் கனடாவில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான நஷனல் போஸ்ட்டும் இப் புத்தகம் தொடர்பாகவும் மற்றும் இலங்கை நிலை தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேற்றின மக்கள் மத்தியில் இலங்கைக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் இதனால் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கோர்டன் வைஸ் எழுதியுள்ள புத்தகத்தில் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் குறித்தும் மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் எழுதப்பட்டிருந்தாலும் இதுவரை வெளிவராத பல தகவல்களும் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சர்வதேச ரீதியாக பல சர்ச்சைகளை இப் புத்தம் கிளப்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான போரில் கிராமம் கிராமமாக முன்னேறிய இலங்கைப் படையினர் அங்கே முதலில் என்ன செய்தார்கள் என்பதனையும் அவர்கள் மறைத்த பல விடையங்களை கோர்டன் வைஸ் வெளிப்படையாகவே எழுதியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது. |
Geen opmerkingen:
Een reactie posten