தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 september 2011

மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரி லிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக் கிறது உதயசூரியன் கிராமம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நம் தமிழ் உற வுகளின் சிறு எண்ணிக்கையிலானோர் வாழ்கின்ற கிராமம் அது.

சிறு தூறல்களைக் கூட தாங்கிக்கொள் ளாத குடிசைகள், மணலில் விழுந்த இனிப் பையும் விட்டுவைக்க மறுக்கும் பள்ளிக்குச் செல்லாத சிறுவர் கூட்டம், அரை வயிறும் அன்றாட தொழிலும் எனக் காலம் கழிக் கும் பெற்றோர் என நகர்கிறது அவர்களின் வாழ்க்கை.

அந்த கிராமத் துக்கு அருகில் இனந் தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படுவதாகவும் இதுகுறித்து கேட் பார் யாருமில்லை என்றும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் எமக்குக் கூறினார்.

அங்கு நாம் சென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் கறுப்புப் புள்ளியை அடை யாளம் காட்டுவதாக இருந்தன. கிராமத்தை அண்மித்தபோது இராணு வத்தினர் சிலர் 10 முதல் 14 வயது நிரம் பிய சிறுவர்களிடம் ஏதோ விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அந்தச் சிறுவர்கள் எங்கிருந்தோ பசுமாடு ஒன்றைத் திருடி வந்துள்ளனர். அந்தச் சிறார்கள் மாடு வெட்டுவதற்காக ஒரு குழுவினரால் பயன்படுத்தப்படுவதாக இராணுவத்தினர் எமக்குக் கூறினர்.

மாடு வெட்டுவதற்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டிய இடம் கிராமத்துக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த கட்டடம்.

நூற்றுக்கணக்கான காகங்கள் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தன. இறைச்சிக்காக நாய்கள் கூட்டம் சண்டையிடும் காட்சியையும் காணக்கூடியதாக இருந்தது.

இனந்தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படும் இடம் எனக் கூறப்பட்டது அந்த இடம்தான் என நாம் ஊகித்துக்கொண்டோம். அந்தக் கட்டடம் மாடுகள் வெட்டுவதற்காக நகரசபையினரால் அமைத்துக்கொடுக்கப்பட்டது என கிராமத்து மக்கள் கூறினார்கள்.கயிறுகள்,கத்திகள், தண்ணீர்த் தொட்டி என அனைத்துமே அதற்கான அடையாளங்களைக் காட்டின.

இதேநேரம், எமக்கு உதவியாக வந்த அந்தக் கிராமத்துக் குடும்பஸ்தர் கூறிய தகவல்கள் உண்மை நிலையை எடுத்துக்கூறின.

ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 69 வயதான அந்தக் குடும்பஸ்தர் அங்கு நிஜமாகவே என்ன நடக்கிறது என்பதைக் கூறினார்.

"இந்தக் கிராமத்தில உள்ள நிறையப் பேர் நகரசபையில தான் வேலை செய்யினம். எங்களுக்குக் காசு தேவை என்றத சாதகமாகப் பயன்படுத்தும் பலர் இங்க விபச்சாரம் நடப்பதை சொல்ல வேண்டாம் எண்டு சொல்லி பணம் தருவாங்க. நாங்க ஏழைகள் எண்டும் எமக்குக் காசு தேவையெண்டும் அவங்களுக்கு நல்லாத் தெரியும்.

இரவானதும் பொம்பிளைகளின்ற நடமாட்டமாகவே இருக்கும். இப்படியிருக்கும் திறந்த வெளியில் உறவு வச்சுக் கொள்ளுவினம். கிராமத்து ஆட்கள் யாராவது பார்த்திட்டா பணம் கொடுத்திட்டு போயிடுவினம். சிலர் தாம் "ஆமி' என்று சொல்லுவினம். உண்மை எதுவெண்டு எமக்குத் தெரியாதுதானே?.

ஒருநாள் இங்க 2 பேர் வந்தினம். சிங்களத்தில பேசிச்சினம். இங்க உள்ள குடிசைக்குள்ள புகுந்து ஒரு பெண்ணை வரச்சொல்லி பலவந்தமா கூப்பிட்டாங்க. கிராமத்து மக்கள் எல்லாம் கூடினதும் அங்கிருந்து போயிட்டாங்கள்.

இந்த பில்டிங்ல மாடு வெட்டுறது உண்மதான். சின்னப் பொடியன்களுக்கும் நல்ல பழக்கம் உண்டு. அதவிட இந்த விஷயம் தான் அதிகமா நடக்குது. எங்களுக்கு அரசியல்ல யாரையும் தெரியாது. வெளியில சொல்லவும் பயமா கிடக்குது.

இது இவ்வளவும் நான் சொன்னேன் எண்டு தெரிஞ்சா அடுத்த முற நீங்க வரும்போது நான் இருப்பேனோ தெரியேல" என அடுக்கடுக்காச் சொல்லி முடித்தார். அந்த கட்டடத்தைச் சுற்றிப் பார்த்ததில் ஆங்காங்கே உள்ளாடைகள் வீசப்பட்டும் கழிவுப்பொருட்களோடு துர்நாற்றமும் வீசிக்கொண்டிருந்தது.

அரசியல் உரிமைகளுக்காக தமிழ்த் தலைமைத்துவங்கள் ஒரு புறம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இவ்வாறான ஏழை மக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் குரல்கொடுக்க அப்பகுதி தலைமைத்துவங்கள் முன்வரவில்லை என்பதே கிராமத்து மக்களின் குற்றச்சாட்டு.

தாங்கள் ஏழைகள், தங்களின் குரலை மதிப்பார் யாருமில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை அங்குள்ள கிராமத்து மக்கள் நீக்கிக்கொள்ள வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை.

அதேநேரம், நீண்டகாலமாக அப்பகுதியில் விபச்சாரம் நடைபெற்றுவருவதாகவும் எங்கிருந்தோ பெண்கள் அழைத் துவரப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். அந்தக் கட்டடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாயின் அது இராணுவத்தினருக்குத் தெரியாமல் உள்ளதா என்பதும் ஒருபுறம் கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆரோக்கியமான உடலாயினும் சிறியதொரு நச்சுமுள் ஆயுள்வரை ஆரோக்கியத்தைக் கெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மரணத்துக்கு இட்டுச்செல்வதைப்போல இந்தப் பிரச்சினையும் சமுதாயத்தின் போக்கை மறுதிசையில் மாற்றிவிடக்கூடிய அபாயம் நிறைந்தது.

இதுகுறித்து சாவகச்சேரி மாநகரசபையினரும் பொலிஸாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமும் கட்டாயமானதுமாகும்.அத்துடன் பகிரங்கமாக செய்யப்படும் தவறுகள் சுட்டிக்காட்டப்படாவிடின் அப்பகுதி மக்களின் எதிர்காலம் இருள் நிறைந்ததாகவே இருக்கும் என்பது கண்கூடு.

இந்தக் கிராமத்து மக்களின் நலன்கருதி உரிய தரப்பினர் சரியான தீர்வினை முன்வைக்க வேண்டியது இன்றைய காலத்தின் அத்தியாவசியத் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்

Geen opmerkingen:

Een reactie posten